மிட் நைட் மசாலா
வெய்யிலையும் பனியையும் ஒன்றாக அனுபவிக்க முடியுமா?
இனிப்பையும் கசப்பையும் இணைந்து ருசிக்க முடியுமா?
இரவும் பகலும் இணைந்து வருமா?
அழுகையையும், சிரிப்பையும் ஒருங்கே காண இயலுமா?
முதல் மூன்று கேள்விகளுக்கு பதில் இல்லையென்றாலும், நான்காவது கேள்விக்கு பதிலை நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன். சினிமாவில் சிரித்துக்கொண்டே அதை அழுகையாக மாற்றும் செயற்கையான காட்சி அல்ல.
பல்லாயிரக் கணக்கான மக்கள், அதில் பாதிப்பேர் சிரிப்புடன், மீதிப்பேர் அழுகையுடன் அல்லது அதிர்ச்சியுடன். Pure Natural feelings.
நேற்று, யூரோ - 2004 இறுதிப் போட்டி முடிந்தவுடன் நள்ளிரவு 12 மணிக்கு இந்த நிகழ்வுகளைக் காண நேரிட்டது.
கிரீஸ் ஆதரவாளர்களிடையே ஆனந்தமும், கொண்டாட்டமும், அருகிலேயே போர்ச்சுக்கல் ஆதரவாளர்களிடையே அழுகையும் அதிர்ச்சியும்.
பார்த்துக் கொண்டிருந்த எனக்குத்தான், குழப்ப மனநிலை. சிரிப்பவனைப் பார்த்து மகிழ்வதா? அல்லது அழுபவனைப் பார்த்து அனுதாபப்படுவதா?
"இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்பேன்...."
(1) comments