=====================================================================
இந்த வார விகடனின் இம்சை பிரதர்ஸ்
**************
‘‘‘கலைஞர் பெரிய டாக்டர், நான் சின்ன டாக்டர், வைகோ புரட்சி டாக்டர்’னு ராமதாஸ் சொல்லியிருக்காரே?’’
‘‘மக்கள் நிரந்தர நோயாளிகள் ஆகிடாம இருந்தா சரிதான்!’’
**************
"பிரதமராகும் எல்லாத் தகுதியும் சோனியாவுக்கு உண்டு’னு மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் சுர்ஜித் கூறியுள்ளாரே?’’
‘‘அப்படிப் போடு ‘அருவாளை’?!’’
**************
‘‘நடிகை ரம்பா பி.ஜே.பிக்கு பிரசாரம் பண்றாங்களாமே?’’
‘‘எதிர்க்கட்சிகள் ‘தொடை’ நடுங்கணும்னு நினைக்கிறாங்க போலிருக்கு!’’
**************
‘‘முக்கிய கட்சிகள் எல்லாம் இன்டர்நெட்டில் வெப்சைட் துவங்கியிருக்காமே?’’
‘‘வாக்காளர்களுக்குப் பல வழிகளில் ‘வலை’ விரிக்கிறாங்கப்பா?’’
****************
(0) comments

10 ஆண்டுகள் கடுங்காவல்...! ரூ.55 லட்சம் அபராதம்...! சாந்தகுமார் கொலை வழக்கில் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு தண்டனை
சென்னை: பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 55 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பிரின்ஸ் சாந்தகுமார் மற்றும் ஜீவஜோதியை கடத்தியது குறித்த வழக்கு தீர்ப்பு இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நன்றி : dinamalar
“இந்தத் திருகுக் கத்தியை நான்தான் இடும்பன்காரியிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்தேன்.இதை வீசி எறிந்தவன் நானேதான்! இந்த என்னுடைய வலது கரந்தான்! சோழ சக்கரவர்த்திகளுக்கு முடிசூட்டிய பரம்பரையில் வந்த இந்தக் கரந்தான் கத்தியை எறிந்தது. ஆனால் இளவரசர் கரிகாலர் மீது எறியவில்லை, நந்தினியின் பேரில் எறிந்தேன். என்னை மோகவலையில் ஆழ்த்தித் துரோகப் படுகுழியில் வீழ்த்திய அந்த மாயப் பிசாசைக் கொன்றுவிட எண்ணி எறிந்தேன்; குறி தவறிக் கரிகாலர் மீது விழுந்தது!..."
அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நெடுங்கதையில் பெரிய பழுவேட்டரையர், ( வயது : 60+ ) வாக்குமூலம்
நன்றி : projectmadurai
60 வயது தாண்டிவிட்டால் ஆண்களுக்கு இளமை திரும்பிவிடுமா? ஆயிரங்காலத்து கேள்வி!! கிழவர்களை (16+ பெண்கள் மூலம்)கேட்டால்தான் தெரியும்.
பாரதியின் அம்மாக்கண்ணு பாட்டுதான் ஏதோ, சம்பந்தமே இல்லாமல் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.
பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
ஏட்டைத் துடைப்பது கையாலே-மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே;
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.
காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயாலே.

அலுவலகப் பணியின் காரணமாக, பாரதம் செல்ல நேரிட்டது. 2 நாட்களில் திரும்பிவிட்டேன் என்றாலும், 20 நாள் இருந்தது போன்ற உணர்வு. என் தாய்த்திரு நாடு அல்லவா?
ஆதர்சக் கவிஞன் பாரதிக்கு பிடித்த இடங்களில் ஒன்றான சேர நன்னாட்டில், கொச்சியில், அதன் இளமையை ரசிக்க நேரமில்லாமல் அவரமாகத் திரும்ப வேண்டியதாயிற்று.
சட்டெனப் பெய்யும் மழை. உடன் மலரும் அந்த மண் வாசம், மழையிலும் குடையுடன் எப்போதும் அவசரத்தில் மக்கள் கூட்டம், மக்களைவிட அதிகமான பலதரப்பட்ட வாகனங்கள், பச்சை மரங்கள், அதில் சிறகடித்து விளையாடும் பறவைகள், கோவில்கள், creeks, அதில் ஊர்ந்து செல்லும் launches, வேஷ்டிகள், அவ்வப்போது தென்படும் முண்டுகள், வெளிப்பார்வைக்கு என் பாரதம் மிகவும் அழகுதான், எனக்கு எப்போதும் பொன்குஞ்சுதான்.

பெண்களின் அழகு குறிப்பிட்ட சில நாட்களில்தான் உச்சத்தில் இருக்குமாம். அதையும் ஆராய்ச்சி செய்து செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
''Women who make the room light up with their good looks may have a secret up their sleeve - it may be down to their menstrual cycle. Both men and women consider a woman's face to be at its most attractive when she is at the peak of her fertility, according to new research.''
அதை இங்கே முழுதுமாகப் படிக்கலாம். சாமுத்திரிகா லஷணதிற்கும் இந்த செய்திக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?

கூகிள் தரும் மின்னஞ்சல் (svenkat@gmail.com )சேவையினை இன்று பதிவு செய்துகொண்டேன். 1GB கொள்ளளவு கொண்ட இந்த மின்னஞ்சல் சேவை நிச்சயம் இணைய உலகை ஒரு கலக்கு கலக்கிவிடும் என நம்பலாம்.
(0) comments
கடந்தவாரம் நிறைவாக வலைப் பதிக்கமுடியவில்லை. அது மட்டுமின்றி வேறு எந்த வலைப்பதிவையும் பார்க்கமுடியவில்லை. ஒருசில வேலைகளை அலுவலக நேரம் தாண்டியும் செய்யவேண்டிய சூழ்நிலை. காரணம் என் பாஸ். அவரது தேவைகள். தன் தேவைகளை மாத்திரமே (எதிர்)பார்க்கும் வழக்கமான மேலாளர். இது வித்தியாசமானது இல்லையாதலால் வருத்தம் தெரியவில்லை. ஆனால் that provoked me to find from everyone about their bosses and their behaviour. Astonishingly, rather commonly, the results show no variance.
அதனால்தானோ என்னவோ, இந்த மேலாளர்கள் சம்பந்தமான ஜோக், நம் பஞ்ஜாப் நண்பர்களைக் காட்டிலும் பாப்புலர்.
That remembers me a famous quote
“ Organization is a tree with full of monkeys, the one sitting at the top will always see below the smiling faces whereas the ones sitting at the bottom see above only the A** *****.” இணையத்தில் இது குறித்து மேய்ந்தபோது கிடைத்த சுட்டி " மோசமான மேலாண்மையியல்"
இதில் மோசமான மேலாளர்களை சமாளிப்பது குறித்து 1200 இணைப்புகளை தொகுத்துள்ளார்களாம். இன்னமும் முழுதாகப் பார்க்கவில்லை.
முக்கியமாக வீட்டு "boss"-ஐ சமாளிப்பது பற்றிய சுட்டியை முதலில் பார்க்க வேண்டும்.

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் யார் தெரியுமா?
நிச்சயம் உங்கள் அனைவருக்கும் தெரிந்த பெயர்தான்.
கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
அவள் கதாநாயகியா அல்லது வில்லியா?
அழகியா அன்றி சாகசக்காரியா?
தன்னிகர் அற்ற தலைவியா அல்லது இரக்கமற்ற அரக்கியா?
பெரிய கிளியோபாட்ராங்கர நினைப்பு என்று தன் அழகைக் குறித்து அலட்டல் விடும் எத்தனை பெண்களை சொல்லியிருக்கிறோம். இன்னமும் சொல்லுகிறோம். உண்மையிலேயே இந்தக் "கிளி" அழகுதானா? புகைப்படத்தில் இருக்கும் "காசு" அப்படித்தான் காட்டுகிறதா? இந்தக் காசு அவள் வாழ்ந்த காலத்தில் தயாரிக்கப் பட்டதுதானாம். இப்பொழுது நீங்களே முடிவு செய்யுங்கள்.
அந்த கிளியோபாட்ராவைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்.
படித்தவுடன் பட்டென்று (ஒரு அனிச்சை செயலைப்போல) சிரிப்பை வரவைப்பவைதான் சிறந்த "ஜோக்". அந்த வகையில் இன்று சுற்றுச்சூழல் மறந்து என்னைச் சிரிக்க வைத்து, அருகில் இருப்பவர்களையெல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்க வைத்தது இங்கே:
(தாஜ்மகால் அருகே...?)
மனைவி : ஏங்க நான் திடீர்னு செத்துட்டா, என் நினைவுச் சின்னமா என்ன கட்டுவீங்க?
கணவன் : வேற யாரு, உன் தங்கச்சியைத்தான்!
(0) comments
(தாஜ்மகால் அருகே...?)
மனைவி : ஏங்க நான் திடீர்னு செத்துட்டா, என் நினைவுச் சின்னமா என்ன கட்டுவீங்க?
கணவன் : வேற யாரு, உன் தங்கச்சியைத்தான்!
வர வர இந்த ஈ-மெயில் புரளிகளும் அதன்மூலம் வரும் தொடர் அஞ்சல்களும் ஒரு தீராத தலைவலியாகவே மாறிவிட்டன. திருப்பதி சாமியிலிருந்து திருப்பூர் ஆசாமி வரை எதாவது படம் அல்லது PPT அல்லது கவிதை அல்லது STATISTICS என்ற பெயரில் MAILBOX – ன் ன் பாதியை அடைத்துக்கொண்டு வரும் குப்பைகளை (உடனே பத்து பேருக்கு அனுப்பினால் அதிர்ஷ்டம் வரும். இல்லையேல் ரத்த வாந்தி வரும்.) களையெடுக்க யாராவது ஏதாவது செய்ய முயன்றால் அவர்கள் நீடூடி வாழவேண்டி எல்லோருக்கும் ஒரு பத்து மெயில்களாவது அனுப்ப உத்தேசம்.
இது குறித்து காசியின் பதிவும் கண்ணனின் சுட்டியும்.....
(0) comments
இது குறித்து காசியின் பதிவும் கண்ணனின் சுட்டியும்.....
விசுவின் அரட்டை அரங்கம் மார்ச் 26 அன்று பஹ்ரைனில் நடக்க இருப்பதை முன்னிட்டு அதற்கான வடிகட்டும் முன் அரட்டைகள் நடைபெற்றன. அந்த முன்னோட்டத்தின் ஒரு பகுதியாக எப்படி சின்னத் திரையில் பேசவேண்டும் என ஒரு ஜுனியர் விசு, வகுப்புகள் நடத்தினார். நவரசமும் கலந்த ஒரு நாடகம்தான் அரட்டை அரங்கம். அந்த நாடகம் 180 நாடுகளில் உள்ள 6 முதல் 60 வயதுவரை அனைவரையும் கவர வேண்டும். எனவே நடிகர்களாக மாறுங்கள் என்றார்.
உண்மைதான். மக்களை ஏமாற்ற நடிகர்களாக மாற வேண்டியது அவசியம்தான்.ஆனால் பேசவந்த பேச்சாளர்களிடமும் தேர்வுக்குழு நடிகர்களாகத்தான் நடந்து கொண்டது.
பேசவந்தவர்களும் மக்கள்தானே என்ற எண்ணமா, தெரியவில்லை. ஆனால் முன்பே தயாரித்துவந்த, நன்றாக ஒத்திகை பார்க்கப்பட்ட (தேர்வு) நாடகத்தை நன்றாக நடத்தியுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர்கள், அதாவது பேச்சாளர்கள் மார்ச் 26 அன்று இயக்குனர் "விசு" முன்னிலையில் உலகத்து மக்கள் காண நன்றாகவே நடித்துக் காட்டினார்கள்.
ஐயகோ! நாமனைவரும் மக்களோ அன்றி மாக்களோ? பராபரமே யாமறியோம்.
ஆனால் ஒரு முக்கிய செய்தியை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். சன் தொலைக்காட்சியில் வரப்போகும் விசுவின் இறுதி அரட்டை அரங்கம் பஹ்ரைனில் எடுக்கப் பட்டதுதானாம்.
" இனிமேல் யார் வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளட்டும். ஆனால் அது விசுவின் அரட்டை அரங்கமாக நிச்சயம் இருக்காது. என் உடல் நலம் அதிகப் பயணங்களைத் தாங்காது. என் மனைவியும் மகள்களும் என் உடல்நலம் மேலும் கெட்டுவிடக்கூடாது என வற்புறுத்தி கூறிவிட்டதால்தான் இந்த முடிவு" என முத்தாரமாய் பேசி, பின்னர் தான் தேர்தலில் "நிற்க" இருப்பதாகக் கூறினார். அதற்கு மட்டும் உடல் நலம் ஒரு பொருட்டே இல்லையாம்.
சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும் என்று யாரோ எதற்கோ கூறியதுதான் ஞாபகம் வருகிறது.
ஐம்பெரும் காப்பியங்களுக்கு இணை எனச் சொல்லத்தக்க காவியமான " பொன்னியின் செல்வன்" இணையத்தில் காணக்கிடைக்கிறது. அது மட்டுமின்றி பல தமிழ் இலக்கியங்கள் மின் தொகுப்புகளாக மாற்றம் செய்யப்பட்டு பழந்தமிழ் கணித்தமிழாக நமக்கு கிடைக்கிறது. சில உத்தமர்களின் உன்னத முயற்சியின் பலன் தான் இவை. தமிழ்த்தாய் தன் ஆதிக்கம் வளர அவர்களை மேன்மேலும் வாழ வைக்க வேண்டும். அவர்களின் இமாலய முயற்சிக்கு என்னாலான செயல்களை ராமாயண அணிலைப்போல செய்துதர எனக்கும் அந்த தமிழ்த்தாய்தான் சக்தி தர வேண்டும்.
(0) comments
கம்ப்யூட்டர் தெரியும், சிம்ப்யூட்டர் தெரியுமா? நேற்று வரை முழுதாகத் தெரியாமல் இருந்தது. இன்று திரு. வெங்கட் உதவியால் தமிழோவியம் மூலம் மேற்கொண்டு தெரிய வந்தது. அடுத்தமுறை பாரதம் செல்லும்போது இந்திய சிம்ப்யூட்டரை நிச்சயம் "கை"யகப்படுத்தவேண்டும்.
(0) comments
விகடனின் பழைய "பூமராங்" இப்போது "இம்சை பிரதர்ஸ்" என்ற புதுப்பொலிவுடன் களம் இறங்கியுள்ளது. காரம் மட்டும் சிறிதும் குறையவில்லை.
‘‘தேர்தலுக்குப் பின் நதிநீர் இணைப்பு பணி தொடங்கும் என்கிறாரே வாஜ்பாய்..?’’
‘‘ஓஹோ.. இப்போதைக்கு நடிகர் இணைப்புப் பணி மட்டும்தானா?’’
‘‘‘ம.தி.மு.க-வில் ஜமீன்தார்கள் இல்லை’னு வைகோ சொல்கிறாரே?’’
‘‘ஓஹோ.. ஜாமீன்தார்கள்தான் இருக்கிறார்களோ?’’
ஒரு சோறு பதம் இதோ, மற்றவை இங்கே

தேர்தல் ஜுரம் வந்தாலும் வந்தது. எத்தனை வகையான வாய்த்தாக்குதல்கள்.
கடந்த வார ஜூ.வி. யில் வந்த பேப்பர் பையனின் நல்லா சொன்னாங்க பகுதியில் வந்த ஏவுகணைகள்
“ஜெயின் கமிஷன் அறிக்கை பற்றி ஒரே மேடையில் ஜெயலலிதா விவாதிக்கத் தயாரா? “
--கருணாநிதி
“ஜெயின் கமிஷன் மட்டுமல்ல... சர்க்காரியா கமிஷனையும் சேர்த்து விவாதிக்க நான் தயார். கருணாநிதி சட்டசபைக்கு வரத் தயாரா? “
--ஜெயலலிதா
அரசியல் சூடு என்பது இதுதானோ?