<$BlogRSDURL$>

தமிழகம் ஒளிர்கிறது!!!!!!!




வாழ்க பெண்மை, வளர்க பெண்ணியம்.
ஒழிக ஆணாதிக்க சமுதாயம்.
கருத்தும் கொள்கையும் : அ.இ.அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர்
(0) comments


இந்த இரண்டு படங்களில் யார் உண்மையான சதாம்?

fakesaddam.com - என்ற இணையத்தளத்தைப் பொறுத்தவரையில் இரண்டுமே சதாம் அல்ல. ஒன்று புஷ், மற்றது போலி சதாம்.
பிடிபட்டது சதாமின் நகல்தான் என இவர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். (பிப்ரவரி வரையில், அதற்குப் பிறகு எந்த செய்தியும் ஏற்றப்படவில்லை)
அதற்காக சதாம் பற்றிய இச்செய்திகளை நான் நம்பவில்லை
நம்பிக்கைதான் வாழ்வின் அடிப்படை. நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.
இதில் யார் நம்பிக்கை கெடப்போவதில்லை?
(0) comments

நேற்று முன்தினம் தற்செயலாக மெட்டிஒலி மெகாத்தொடரைப் பார்க்க நேரிட்டது. ( நான் வீடு திரும்பும்போது அனேகமாக அண்ணாமலை அல்லது அடுத்த சீரியல்தான் அழுதுகொண்டும் அழவைத்துக்கொண்டும் இருக்கும்)
அதில் அப்பா அடிக்கடி கோபப்படும் தன் மூத்த மகளிடம் " ரௌத்திரம் பழகு" என்பதற்கு அளித்த விளக்கம் வெகு அருமை.
"கோபத்தின் விளைவுகள் பலவீனமாக இருக்குமானால் அங்கே கோபத்தை காட்டாமல் இருக்கப் பழகு. ரௌத்திரம் பழகு"
மூன்று நான்கு நிமிடம் அந்தப் பெரியவர் பேசிய வசனம் சுத்தமாக என்னைக் கட்டிப் போட்டு விட்டது. குப்பையான சிப்பியில் கிடைத்த முத்து அது.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு மேலாக அவற்றை பழக்குவது என்பது எப்படிப்பட்ட கடின செயல். அதற்கு எத்தகைய மன உறுதியும் ஆற்றலும் வேண்டும். உணர்ச்சிகளோடு விளையாடாதே என்கிற மனிதன் உணர்ச்சிகளையே விளையாட்டுப் பொருளாக மாற்ற மனத்திண்மை மட்டும் போதாது. அசுரப் பயிற்சியும் வேண்டும்.
இனிமேல் அடிக்கடி ரௌத்திரம் வரும் போது

""ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?""

என்ற பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பலை நினைவில் கொண்டு,
ஒருமுறையாவது அடக்கப் பழக முயற்சி செய்யப் போகிறேன்,

"செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான், அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என்" எனச் சொன்ன ஐய்யன் வள்ளுவனே அதற்குத் துணை.
(0) comments

வடக்கில் (உச்சியில்) இருக்கும் தெற்கு



இந்த ""முத்தமிழ்"" வித்தகர்கள்( !!!! ) என்ன பேசியிருப்பார்கள்?

கிருஷ்ணமூர்த்தி : எங்கள் வேலை முடிந்து விட்டது. நிம்மதியாக இருக்கிறது.

கோபால்சாமி : ஆமாம். சந்தோஷமாகவும் இருக்கிறது.

அப்துல் கலாம் : என் வேலை ஆரம்பமாகி விட்டது. வருத்தமாக இருக்கிறது. மந்திரி சபை அமையும்வரை என் நிம்மதி போச்சு.
(0) comments

ஓ ஹென்றி சாயலில் மிக அழகாக சிறுகதைகள். ஹைக்கூ விரிவடைந்து சிறுகதையாய் உருவெடுத்ததுபோல ....., எதார்த்தத்தையும் கற்பனையையும் காக்டைல் செய்து பதித்துள்ள சத்யராஜ்குமாருக்கு என் வாழ்த்துக்கள். படித்தவுடன் புன்முறுவலுடன் கண்டிப்பாகப் பாராட்டத்தோன்றும்.
அவரது பரிசுக்கதைகளையும் இங்கே படிக்கலாம்.
(0) comments

=====================================================================
அன்னாசிப்பழ சதையில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன.
அன்னாசிப்பழம் குடல் செயல்களை ஊக்குவிக்கும். புழுக்கொல்லி, விஷம் நீக்கியாகச் செயல்படும். ஜீரணத்தைக்கூட்டும். சிறுநீரைப் பெருக்கும். பசியைத் தூண்டும். குளிர்ச்சியை ஊட்டும். மேலும் மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும்.
1. அன்னாசிப்பழத்தை துண்டுகளாக்கி அல்லது சாறாக குழந்தைகட்கு கொடுக்க... வயிற்றிலுள்ள பூச்சிகள் மாறும்.
2. பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர... இடுப்பு வலி மாறும்.
3. அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் தோய்த்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும்.
4. அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக்கற்கள் கரையும்.
5. அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட... இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.
6. பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.
7. அன்னாசிப்பழத்தை வட்டமாக வெட்டி காய வைத்து பாலில் போட்டு பின் உலர வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தம் ஊறும். பித்தக் கோளாறுகள் தீரும்.
8. வயிறு றைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும்.
9. இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு தீரும்.
10. அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும்.
11. அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.
12. பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரணம் ஏற்படும்.
13. அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாக செயல்படுகிறது.
14. குழந்தைகட்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும். கண்கள் ஒளி பெறும்.
15. அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகட்கு கொடுக்க உள் உறுப்புகள் பலப்படும். பசி ஏற்படும்.
16. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகும். வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும்.
நன்றி : கூடல்.காம்
(0) comments
======================================================================
image002IIT / IIM-ல் படித்து டை கட்டி, AC காரில் ஆபீஸ் சென்று, அதிகாரம் செய்து, ஒரு பட்டதாரி வாங்கும் கூலி, நம் இந்திய அரசாங்கம் அதன் படிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கும் (சட்டபூர்வ) கூலியை விட மிகவும் குறைவுதான்.
(0) comments

=====================================================================
சீனத்தலைநகரில் 2.3 பில்லியன் டாலர் செலவில் புதிய விமான நிலையக்கட்டுமான வேலைகள் ஆரம்பமாகி விட்டன. 2008 ஒலிம்பிக்ஸுக்கு பெய்ஜிங் தயாராகி வருவதன் அடையாளச்சின்னம்தான் இந்த புதிய விமான நிலையம். கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை சமீபத்தில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.


00609063
00609075


2007-ல் முதல் விமானம் இந்த புதிய தளத்தில் இறங்கும் போது இப்படித்தான் இருக்குமாம்.


b1rr
br6


மேலும் சில வரைபடங்கள் இங்கே (1) (2) (3) (4) (5) (6)

ஆச்சரியங்கள் நிறைந்த சீனாவை சுற்றிப்பார்த்தால் என்ன என்று தோன்றுகிறது. நம்மிடம்தான், இணையம் என்ற விமானம் உள்ளது, மவுஸ் என்ற ரேடார் உள்ளது, "Batelco Inet" விசா மூலம் சீனாவைச் சுற்றிவந்ததும் எனது சீனப் பயணக்கட்டுரையை பதிப்பிக்கிறேன்.
(0) comments

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com