திரை விமர்சனம் எழுதினால் அது பாராட்டாகத்தான் இருக்க வேண்டும். இல்லையேல் சினிமா உலகத்தவர்கள் பொங்கி எழுவார்கள், விமர்சித்தவர்களை அந்த விமர்சனத்தை விடவும் மோசமாகத் திட்டுவார்கள்.
வருங்கால இயக்குனராகும் கனவு கொண்ட கத்துக்குட்டியோ எந்தக் குப்பையாக இருந்தலும் அதை ஆகா, ஓகோ என்றுதான் விமர்சிப்பார்.(அப்படி நாலு விமர்சனம் எழுதினால் ஐந்தாவது குப்பையை அவரே Release செய்வார்)
சில சமயம் உண்மையான அல்லது மாறுபட்ட விமர்சனமே வராதோ என ஏங்குகிறீர்களா?
கிறுக்கல்கள் புகழ் (காதல்)கிறுக்கன் நடித்த "தென்றல்" விமர்சனம் இதோ
http://www.thinnai.com/ar0311041.html
நன்றி பத்ரி உங்கள் சுட்டியின் உதவிக்கு
(0) comments

ஒரு நல்ல நண்பன் எப்படி இருக்கவேன்டும் என கவியரசு கண்ணதாசன் தன் அர்த்தமுள்ள இந்து மதம் தொகுப்பில் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். எவ்வளவு ஆழமான கருத்துக்கள்.
படித்துப்பாருங்கள், பிடித்துப் போகும்.
நன்றி: yarltamil.com
நல்ல நண்பன்
நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனை தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது. முகத்துக்கு நேரே சிரிப்பவன், முகஸ்துதி செய்பவன், கூனிக்குழைபவன், கூழைக்கும்பிடு போடுபவன், இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான். எந்தநேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். ஆகவே ஒருவனை நண்பனாக்கிக் கொள்ளுமுன், அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
சரியாகத் தெரிந்த பின்புதான், அவனிடம் ரகசியங்களைப் பரிமாறிக்கொள்ளவேண்டும். நன்றாக ஆராய்ந்து, இவன் நல்லவன்தான் என்று கண்டபின், ஒருவனை நண்பனாக்கிக் கொண்டுவிட்டால், பிறகு அவன்மேல் சந்தேகப்படக்கூடாது. அவசரத்தில் ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனைச் சந்தேகிப்பதும், தீராத துயரத்தைத் தரும் என்றான் வள்ளுவன்.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
யாரோடு நீ பழக ஆரம்பிக்கின்றாயோ, அவனோடு நீ இனிமையாகப் பழக வேண்டும். கொஞ்ச காலத்திற்கு அதை, நீ நட்பாகக் கருதக்கூடாது. வெறும் பழக்கமாகத்தான் கருதவேண்டும்.
உனக்குக் கஷ்டம் வந்தபோது அவன் கைகொடுத்தால், உன்னைப்பற்றி நல்லவிதமாக, நீ இல்லாத இடத்தில் அவன் பேசுவதைக்கேள்விப்பட்டால், பிறர் உன்னைப்பற்றித் தவறாகப் பேசும்போது, அவன் தடுத்துப் பேசியதாக அறிந்தால், அவனை நீ நம்பத் தொடங்கலாம்.
தொடர்ந்து இது போன்ற பல செய்திகளைக் கேள்விப்பட்ட பிறகுதான், அவனை நண்பனாக நீ வரித்துக் கொள்ளவேண்டும்.
பல இடங்களில் ஓரே மாதிரி ஒருவன் நடிக்க முடியாது. ஆகவே, உன் மீது அவன் வைக்கும் அன்பும் உண்மையாகத் தான் இருக்கமுடியும். நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல. ஆபத்தில் உதவுவது ஒன்றே நட்பு. நீ அழும்போது உண்மையிலேயே அவனுக்கும் அழுகை வருகிறது என்றால், அதுதான் நட்பு.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்றான் வள்ளுவன்.
நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது ஒரு பழம்பாடல். பாடல் மறந்துபோய் விட்டது விளக்கம் இதுதான். ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள் இரண்டு, தென்னைமரம் போன்றவர்கள் மூன்று வாழை மரம் போன்றவர்கள். பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல.
பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. அது தானாகவே முளைக்கிறது. தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது. தனது உடம்பையும் ஓலையையும் நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது. நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன், பனைமரம் போன்ற நண்பன். தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்குப்பலன் தருகிறது. அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிறவன், தென்னை மரத்துக்கு இணையான நண்பன். வாழை மரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக்கவனித்தால்தான் நமக்குப் பலன் தருகிறது. அதுபோல், தினமும் நம்மிடம் உதவி பெற்றுக்கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன். இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பனே நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டிய நண்பன்.
எனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள். எனக்குக் கிடைத்த நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர் இருவரே அப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தார்கள் என்பது பொருந்தும். மற்றவர்கள் எல்லோரும் என்னிடம் பணம் பறிப்பதற்காகவே நண்பர்களாக இருந்தார்கள். அதிலே நான் ஏமாளியாக இருந்தேன் என்பதை ஒப்புக்கொள்வதில் வெட்கமில்லை. ஆனால் என்னை ஏமாற்றிய நண்பர்கள் எல்லாம் இன்று செல்வாக்கிழந்து கோழி மேய்க்கிறார்கள் என்பதை எண்ணும்போது, சிநேகிதத் துரோகிகளுக்கு இறைவன் அளிக்கும் தண்டனையைக் கண்டு, நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மற்றவர்களுக்கு அந்த அனுபவம் வரக்கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறேன். இந்துக்களின் இதிகாசங்கள், நல்ல நண்பன் எப்படி இருப்பான் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. ஸ்ரீராமனுக்குக் கிடைத்த நண்பர்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தால் துன்பங்களே இல்லாமல் போய்விடும். ஸ்ரீராமனின் துன்பங்களை யார் யார் பங்குபோட்டுக்கொண்டார்கள்?
அதை ரகுநாதனின் வாய்மொழியாகக் கம்பன் சொல்கிறான்.
குகனொடும் ஐவ ரானோம்
முன்பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறு ரானோம்
எம்முறை அன்பின் வந்த
அகமலர் காதல் ஐய
நின்னொடும் எழுவ ரானோம்!
வீடணன் நண்பனானபோது, வீடணனைப் பார்த்து ஸ்ரீ இராமன் சொன்ன வார்த்தைகள் இவை. வீடணா! நானும் இலக்குவனும், பரதனும் சத்துருக்கனனும் நான்கு சகோதரர்களாகப் பிறந்தோம்.
கங்கை இரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான் குகனைச் சந்தித்தபோது, நாங்கள் ஐவரானோம்.
சுக்ரீவன் எங்களோடு சேர்ந்தபோது நாங்கள் அறுவரானோம்.
உன்னைச் சேர்த்து இப்போது எழுவராகிவிட்டோம்.
ஆம் ராமனுக்கு அவர்கள் செலுத்திய அன்புக் காணிக்கை ராமனுடைய சகோதரர்களாகவே அவர்களை ஆக்கிவிட்டது. நல்ல நட்புக்கு என்னென்ன இலக்கணங்கள் உண்டோ அவை எல்லாம் கூடி வாயக்கப்பெற்ற ஒருவன் நண்பனாக மட்டுமின்றிச் சகோதரனாகவும் ஆகிவிடுகிறான்.
நண்பர்கள் தனக்கு உதவி செய்தார்கள் என்பதற்காககத் தன் சொந்த சகோதரர்களையே விரோதித்துக் கொண்டு செஞ்சோற்றுக் கடன் கழித்து, ஒருவன் மகாபாரதத்தில் காட்சியளிக்கிறான். அவனே கர்ணன். கர்ணன் குந்தியின் மகன் பாண்டவர்களின் சகோதரன்.
கௌரவர்கள் அவனிடம் பாராட்டிய நட்புக்காக அவர்கள் செய்த உதவிக்காக, போர்க்களத்தில் தன் சகோதரர்களையே எதிர்த்தான் கர்ணன். நட்பு என்பதும் செஞ்சோற்றுக் கடன் கழித்து நன்றிசெலுத்துவது என்பதும் இந்துக்களின் மரபு. அந்த மரபின், நட்பின் மேன்மையை வற்புறுத்தும் புராணக் கதைகள் பலவுண்டு. நல்ல மனைவியை எப்படி இறைவன் அருளுகிறானோ, அப்படியே நல்ல நண்பர்களை அருளுமாறு இறைவனைப் பிரார்த்திப்பது நல்லது.

“”மிதுனம் :
நீங்கள் நினைத்த காரியம் வெற்றிபெற சற்று முயற்சி எடுக்க வேண்டும். பணப்புழக்கம் இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். கலைஞர்கள் திருப்திகரமாகக் காணப்படுவீர்கள். மாணவர்கள், அதிக நூல்களைப் படிப்பதன் மூலம் மேலும் பயன் அடையலாம். பெண்கள், முன்னேற்றம் அடைவர்……..””
இது ஒரு பிரபல இணையப் பத்திரிக்கையில் வந்த மார்ச் மாதப் பலன்.
கிட்டதட்ட மற்ற அனைத்து ராசிகளுக்கும் இதே பலன்கள்தான்.வரிகள் மட்டும் தடம் புரண்டுள்ளன.மன்னிக்கவும், இடம் மாறி உள்ளன. இந்த வரிகளில் எதனைப் "பலன்" என்று சொல்லுவீர்கள்?
"மாத பலன்கள்" என்ற தலைப்புக்குப் பதிலாக "மாத அறிவுரைகள்" என்றிருந்தால் "பலனாக" மன்னிக்கவும், “பயனாக” இருந்திருக்கும்.

பெண் மொழிகள்
பெண் பார்க்கப் போகும்போது கண்களை நம்பாதே, காதை நம்பு.
-யாலின்
பெண் இல்லையென்றால் வீடு இல்லை.
-பல்கேரியா
ஓர் இல்லத்தை இல்லமாக்க, பெண்ணால் மட்டுமே முடியும்.
-சீனா
பெண்ணின் இதயத்தைப் பேச்சால் வெல்ல முடியாதவன், நாக்குள்ள மனிதனல்ல.
-ஷேக்ஸ்பியர்
பெண்ணின் மடியில் இறையன்பு வாழ்கிறது.
-அல்லாமா இக்பால்
ஆண்களை விட பெண்களுக்கு இதயமும் அதிகம். கற்பனையும் அதிகம்.
-லாமார்டன்
உங்களது அன்பை மனைவியிடம் காட்டுங்கள். ரகசியத்தைத் தாயிடம் மட்டுமே கூறுங்கள்
-அயர்லாந்து
பெண்கள் விழிப்பு அடைந்தால், குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும்.
- காமராஜர்
எந்த ரகசியத்தையும் மனைவியிடம் மறைப்பதில்லை என்று ஒருவன் சொன்னால், ஒன்று அவனிடம் ரகசியம் இல்லை; அல்லது மனைவி இல்லை என்று அர்த்தம்.
-ஜெயி ஆட்டஸ்
இதயம் ரோஜாவாக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசனை இருக்கும்.
-ஷேக்ஸ்பியர்
நன்றி: http://tamil.sify.com/amudhasurabi/mar04/fullstory.php?id=13423383
தலைப்பு " பெண் மொழிகள் " தானே!, நான் "பொன் மொழிகள்" என நினைத்துக்கொண்டு பாராட்டி எழுதுவதா அன்றி வழக்கம் போல மறுத்து எழுதுவதா என யோசித்து பின் மீண்டும் தலைப்பை சரிவரப் படித்தபின், ஓ, இது 220KV சமாச்சாரம் கையை வைக்காமல் இருப்பதே உத்தமம் என எண்ணி அடுத்த பக்கம் தாவி விட்டேன்.

ஆபாசம், அல்லது தெய்விகம்
இந்திரா பார்த்தசாரதி
பெயரில் நட்புரிமை தெரிகிறதே தவிர, பேச்சில் அது தெரியவில்லை, 'சிநேகன்' என்ற பெயரைக் கொண்ட திரைப்படப் பாடலாசிரியருக்கு. ஆபாசமாகக் கவிதை எழுதுகிற பெண்களை மௌன்ட் ரோடில் நிற்க வைத்து, அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த வேண்டுமென்று, அவர் ஆசையையோ, கோபத்தையோ ஒரு தனியார் தொலைக்காட்சி சானலில் வெளியிட்டிருக்கிறார்.
'ஆபாசம்' என்றால் என்ன? மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி, சல்மா, உமா மகேஸ்வரி போன்ற கவிஞர்கள் மீது கொஞ்ச நாட்களாக - இந்த 'ஆபாச' குற்றச்சாட்டைச் சுமத்துகிறார்கள் சில மூத்தக் கவிஞர்களும், திரைப்படப் பாடலாசிரியர்களும். பெண்களின் சொல்லப்படத்தகாத உறுப்புக்களையும், பாலியல் விவகாரங்களையும், பெண் கவிஞர்களே சொல்வதுதான், இவர்களுக்கு 'ஆபாசமாக'ப்படுகிறது. ஆண்கவிஞர்கள் விவரித்துச் சொல்லவேண்டிய விஷயங்களைப் பெண்கள் சொல்லிவிட்டால், ஆண்களின் copyright உரிமை பறிபோய்விடுமே என்ற அச்சமாகவுமிருக்கலாம்.
ஆபாசமாக எழுதப்பட்ட நூல்கள், ஆசாரமாக எழுதப்பட்ட நூல்கள் என்று எதுவுமில்லை, நன்றாக எழுதப்பட்டவை, மோசமாக எழுதப்பட்டவை என்ற இரண்டு வகைதான் உண்டு என்று ஆஸ்கார் வொய்ல்ட் கூற்றைச் சற்று மாற்றிச் சொல்வதில் தவறு ஏதுமில்லை. ரவி சுப்ரமணியன் சொல்வது போல், காலங்காலமாக அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக, சொல்லக்கூடாதவற்றைச் சொல்வோம் என்ற கோபத்தில், இப்பெண்கள் இவ்வாறு எழுதுகிறார்கள் என்பது, இவ்வாறு எழுதுவது ஆபாசந்தான் என்பதை ஒப்புக்கொள்வதுபோல் ஆகிவிடும். ஆண்கவிஞர்கள், பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை விவரித்துச் சொல்லும்போது அது அழகியல் உணர்வில் விளைந்த பரவசம், பெண்கள் தங்கள் உறுப்புக்களைத் தாங்களே சொல்லும்போது, அது ஆபாசம் அல்லது எதிர்ப்பு உணர்வின் அடையாளம் என்று ஆகிவிடுமா?
கி.பி. எட்டாம் நூற்றாண்டில், ஒரு பெண்கவிஞர் எழுதிய கவிதை இது:
'வெற்றிக் கருளக் கொடியான்தன் மீமீது ஆடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே!
குற்றம் அற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கிக் கட்டிரே!'
இந்தப் பெண்கவிஞர், சம காலத்திய ஆண் வர்க்கத்திடம் அசாத்திய கோபப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தாமே கற்பித்துக் கொண்ட மானசீக புருஷன் ஒருவன்தான் அக்காலப் பெண்களின் சமுதாயக் கனவு. ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் அவன்தான் வடிகால்.
சமகாலத்திய ஆண்களைத் துச்சமாகக் கருதுவதற்கேற்ற ஒரு பெண்மைச் செருக்கு இவருக்கு இருக்கிறது. அவர் பாடலைப் பாருங்கள்:
'அங்கைத் தலத்தில் ஆழிகொண்டான் அவன் முகத்து அன்றி விழிப்பேன் என்று,
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச் சிறு மானிடரைக் காணில் நாணும்
கொங்கைத்தலம், இவை நோக்கிக், காணீர்! கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா;
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்.'
அந்தக் காலத்துச் 'சிநேகர்களும், பழனிபாரதிகளும்', இந்த மாதிரிப் பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட முடியாத காரணத்தினால், சமயத்தளைப் பூட்டி, தெய்வங்களாக ஆக்கிவிட்டார்கள்.
ஆண்டாள், பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவர்!
நன்றி: http://samachar.com/tamil/features/110304-Ipa.html
ஆபாசத்திற்கு ஆடை கட்டுகிறோம் என அதை அதிகம் கொச்சைப் படுத்துகிறோமோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. அதை உறுதிப் படுத்துவது போலத்தான் இந்த கட்டுரையாளரும் எழுதியுள்ளார். What a punching finish!!

"what a terrific match. it turned out to be a perfect start to this historic tour!
both the teams deserve a pat on the back for providing us with such an interesting match
India emerged as victors in the end but the real winner today was Cricket!"
இன்றைய ஒரு நாள் போட்டியின் Cricinfo.com - விமர்சனத்தின் இறுதி வார்த்தைகள்.எவ்வளவு நிதர்சனமான உண்மை.
பாகிஸ்தான் போகலாம், ம்ஹூம் கூடவே கூடாது, இல்லை இல்லை போகத்தான் வேண்டும், பாதுகாப்பு இல்லை,
அப்பப்பா எத்தனை பேச்சுகள், எத்தனை கருத்துக்கள். விளையாட்டை விறும்பும் எவறும் இன்று ஜெயித்து விட்டார்கள். விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க மறுத்த விமர்சகர்கள்தான் உண்மையில் தோற்றுப் போனார்கள்.

சிவசங்கர் பாபா பதில்கள் -1
கேள்வி: அருள் என்றால் என்ன?
பாபா: மூச்சு உற்பத்தியாகும் இடம் மனது. நாம் மனத்தை கட்டுப்படுத்தி மூச்சுக் காற்று ஒடுங்கும் இடமாகிய புருவ மத்தியில் நிலைப்படுத்தினால் மனதின் எண்ண ஒடுக்கங்கள் நின்றுவிடும். ஞானி என்பவன் நான், என்னுடையது என்ற பந்தங்களை விட்டுவிட்டு இறைவனது சிந்தனையை மட்டும் எண்ணத்தில் கொண்டு மனத்தை அடக்கி யோகநிலைக்கு செல்கிறான். யோகி என்பவன் மூச்சுக் காற்றை ஒடுக்கி யோகத்தினால் மனத்தை கட்டுப் படுத்தி ஞானத்தை அடைகிறான். புத்த மத பிலாசபியில் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு புருவ மத்தியில் மூச்சுக் காற்று ஒடுங்குவதை பார்த்துக்கொண்டிருந்தால் மெல்ல மெல்ல எண்ண ஓட்டங்கள் நின்று மனது ஒடுங்கும் என்று கூறுகிறது.
குழப்பமற்ற தெளிவான சிந்தனையை கொண்டு வருவது தான் ஆன்மிகம். மனத்தை எண்ணத்தை ஒடுக்குகிற வித்தை தான் ஆன்மிகம். நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்னும்போது அந்த தெய்வங்கள் எல்லாம் உங்களிடத்தில் இருக்கின்றன. முருகன் இதயத்திற்கு சொந்தம். மனத்திற்கு சொந்தக்காரன் சந்திரன். சூரியன் எண்ணம். வெளிச்சம் உங்களிடத்தில் இருக்கிறது. உங்களிடம் இருக்கிற வெளிச்சம் வெளியே வரவேண்டுமானால் அதற்கான சுவிட்ச் உங்களிடம் இருக்கிறது. வெளிச்சத்தை பெறுகிற வித்தையை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் நீங்களும் வெளிச்சமாகிவிடுவீர்கள். வெளிச்சமானவர்களை கண்டறிவீர்கள்.
உங்களது வாழ்க்கையில் வரும் நிகழ்வுகளை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்ற வித்தையை தெரிந்துகொள்வீர்கள். நாமெல்லாம் பார்வையாளர்கள்தாம், செயல்படுகிறவர்கள் அல்ல. அகலிகை கல் ஆனபோது ராமர் பிறக்கவில்லை. அந்த வழியில் ராமர் காட்டிற்கு செல்ல வேண்டும். அவன் கால் அந்தக் கல் மீது பட்டு அவள் பெண்ணாக வேண்டும். எப்படி அகலிகைக்கு ராமன் கால் பட்டதால் சாப விமோசனம் ஆகிவிட்டதோ அது போல் உங்களுக்கும் கஷ்டம் தீருகிற நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள். அதனால், உங்களுடைய கஷ்டமும் தீரும். நீங்கள் கஷ்டம் தீருகிற நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்களா அல்லது இங்கு வந்ததால் உங்களுடைய கஷ்டம் தீர்ந்ததா என்பது இறைவன் ஒருவனுக்குத் தான் தெரியும். ஆனால் உங்களுடைய அனைத்துப் பிரச்சினைகளும் நிச்சயமாக தீர்ந்துவிடும். உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன். நீங்கள் என்னிடத்தில் பூரண சரணாகதி அடைந்தால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
சிவசங்கர் பாபா
நன்றி: http://samachar.com/tamil/religion.php dt 13/3/04
அருள் என்பதைப் பற்றி சி.பாபா அருளியிருக்கும் உரைதான் இது.
பல முரண்பட்ட கருத்துக்களை கொண்டதோ என ஐயப்பாடு எழுகிறது.
என்னளவில் மூச்சு உற்பத்தியாகுமிடம் மூக்கு. மனது என பாபா இதயத்தை சொல்லுகிறாரோ அல்லது நுரையீரலை சொல்லுகிறாரோ, தெரியவில்லை.
நான், என்னுடையது என்ற பந்தங்களை விடுபவன் தான் ஞானி என்கிறார், அதே சமயம், இறுதியில், “என்னிடத்தில்” பூரண சரணாகதி அடையுங்கள், பிரச்சினைகளை நான் தீர்த்து “வைப்பேன்” என்கிறார்.எனவே தர்க்கசாத்திரப்படி இவர் ஞானியாகவோ அல்லது யோகியாகவோ இருக்க முடியாது.
மேலும், காற்று ஒடுங்குவதைப் பார்க்க முடியாது. கண்களை மூடிக் கொண்டால் நிச்சயம் பார்க்க முடியாது.
நாமெல்லாம் பார்வையாளர்கள்தாம், செயல்படுகிறவர்கள் அல்ல என்ற கருத்து சற்றும் ஏற்புடைத்தக்கதல்ல. எல்லாம் அவன் செயல் என சும்மாவே இருக்க முடியுமா? அடுத்த வேளைக்கு சோறு கிடைக்குமா?
ஆனாலும் சில முத்துக்கள் இதில் உள்ளதை மறுக்க முடியாது.
“குழப்பமற்ற தெளிவான சிந்தனையை கொண்டு வருவது தான் ஆன்மிகம்.”
“மனத்தை எண்ணத்தை ஒடுக்குகிற வித்தை தான் ஆன்மிகம்.”
“நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது”
“வெளிச்சத்தை பெறுகிற வித்தையை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் நீங்களும் வெளிச்சமாகிவிடுவீர்கள். வெளிச்சமானவர்களை கண்டறிவீர்கள்.”
அன்னப் பறவையைப் போல நமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு அதை மட்டும் போற்றுவோம்.

வலைப் பூ மாலையில் உள்ள சில பூக்களில் இருக்கும் சரக்குகள் மிகவும் சுகந்தமானவை.
மகரந்த சேர்க்கைக்கு ஒரு தேனீ (கூட்டம்) இருந்தால்........
எவ்வளவு சுவையான கனிகள் கிட்டும்.
"அந்த நாளும் வந்திடாதோ" என எம்.எஸ். ஸுப்புலஷ்மியின் மீரா போல நானும் ........

வணக்கம்
"எமக்குத் தொழில் எழுத்து" என்றான் மகாகவி.
ஆனால் எனக்கு தொழில் எழுத்து இல்லையென்றாலும் பகுதி நேரத்தொழிலாக படிப்பு உள்ளது..
இந்த மின் நாட்குறிபேட்டில் நான் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்த செய்திகளை பதிப்பிக்க விழைகிறேன்

என் கன்னி முயற்சி! ஆனால் கன்னிப்போகும் வயதில்!!
(0) comments