மனிதரில் இத்தனை நிறங்களா?
கடந்த ஜுன் 6-ம் தேதி ஹிந்து-வில் செய்தியான ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட RAW அதிகாரி பற்றி முன்பு (ஜுன் 12 அன்று ) என் எண்ணங்களை எழுதியிருந்தேன்.
அதிலிருந்த சந்தேகங்களுக்கெல்லாம் இன்றைய தினமலரில் பதில் வந்துள்ளது. அதில் சில பகுதிகள் இங்கே:
"அம்பலம்!' : அமெரிக்காவின் அசிங்கமான பொய் முகம் : உளவுத் துறை ஊடுருவலில் புது திருப்பம்
அமெரிக்கா கொட்டிக் கொடுக்கும் டாலருக்கு மதி மயங்கி, இந்திய உளவுத்துறையைச் சேர்ந்த பலர் விலை போயுள்ளனர். முக்கிய தகவல்களை சி.ஐ.ஏ., உளவு அமைப்புக்கு கூறி வந்துள்ளனர். இந்தியாவில், "ரா', ஐ.பி., உள்ளிட்ட மூன்று முக்கிய உளவுத்துறைகள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் அமெரிக்காவின் கையாட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி, இஸ்ரேல் உளவு அமைப்பான "மொசாத்'தும், இந்திய உளவுத்துறைகளில் ஊடுருவியுள்ளதும் தெரிய வந்துள்ளது............................
இதில், உயர் பதவியில் இருந்த ரபிந்தர் சிங் என்ற அதிகாரி, அமெரிக்காவின் சி.ஐ.ஏ., மற்றும் இஸ்ரேலின் "மொசாத்” உளவு அமைப்புகளின் கையாளாக செயல்பட்டு வந்த விஷயம் தற்போது வெளிவந்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா, இஸ்ரேலின் பொய் முகங்கள் அம்பலமாகியுள்ளன...........................
கடந்த சில மாதங்களுக்கு முன், ரபிந்தர் சிங்கிடம் உளவுத்துறை சம்பந்தப்பட்ட பல முக்கிய ஆவணங்களின் நகல்கள் இருப்பதை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார். அப்போது முதல், அவருடைய நடவடிக்கை கண்காணிக்கப்பட்டது. நான்கு மாத கண்காணிப்பிற்கு பின் அவரை கைது செய்ய நாள் குறிக்கப்பட்டது. இதை எப்படியோ மோப்பம் பிடித்து விட்ட ரபிந்தர் சிங், கடந்த மே மாதம் 14ம் தேதி நேபாளம் வழியாக அமெரிக்காவுக்கு தப்பி விட்டார்..............................
உலகளவில் வெளிநாடுகளில் நடக்கும் உளவு சம்பந்தப்பட்ட மாநாடுகளில் ரபிந்தர் சிங் அதிகளவில் பங்கேற்றுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளில் நடக்கும் மாநாடுகளின் போது அடிக்கடி அவர் தனது அறையை விட்டுச் சென்று விடுவார். அதற்கு, "உறவினர்கள், நண்பர்களை பார்க்கச் செல்கிறேன்' என்று அவர் காரணம் கூறியுள்ளார். பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அச்சமயத்தில், சி.ஐ.ஏ., "மொசாத்' அமைப்புகளின் உயரதிகாரிகளை அவர் சந்தித்துள்ளார்.............................

Comments:
Post a Comment