நீண்ட நாட்களாக கோயிலுக்கு செல்லவேண்டும் என்ற ஏக்கம் இன்று தாராசுரம் ஐராவதேஸ்வர சாமி கோவிலை பார்த்ததன் மூலம் ஓரளவு தணிந்தது.கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு முன் நேரில் சென்றது. அந்த நினைவுகளின் மிச்சம் ஒன்றுகூட இன்று இல்லை.
கும்பகோணம் அருகில் இருக்கும் தாராசுரம் கோவில் கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் பழமையானது. இரண்டாம் ராஜராஜசோழானால் கட்டப்பட்டது.
களிமண்ணும் காவிரி மண்ணும் மட்டுமே நிறைந்த இந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கற்றளி எனப்படும் இந்த கற்கோவில் சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த நிகழ்வுதாரணம்.
கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை இணைத்து, தாராசுரம் கோவிலின் இணையப்பக்கம் ஒரு கோவிலாகவே திகழ்கிறது.
ஓவ்வொரு சிற்பமும், எந்த ஒரு சிறிய சிறப்பு அம்சமும் இத்தள(ல)த்தில் காணக் கிடைக்கிறது.
குறிப்பாக , நாட்டிய முத்திரைகள் அடங்கிய சிற்பங்கள் 900 ஆண்டுகளுக்கு முன்னரே பரதம் எத்தனை செழிப்புடன் இருந்திருக்கிறது என அறியத்தருகிறது.
இந்த இணையத்தின் முகப்புப் பகுதியில் கும்பகோணத்தில், மற்றும் அருகில் உள்ள அனைத்து கோவில்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். கட்டாயம் ஒரு முறை (நேரில்) போய் பார்த்து வாருங்கள். இக் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
Comments:
Post a Comment