<$BlogRSDURL$>

(தமிழ்ப்) பிதா தேற்றம்
“ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக் கூறதாக்கி
கூறிலே ஒன்றுதள்ளி குன்றத்தில் பாதிசேர்த்தால்
வருவது கர்ணந்தானே...... “

இது ஒரு பழங்கால தமிழ்ப் புலவனின் பாடல். எத்தனை நூற்றாண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியாது. பழைய பாடல், மிகவும் பழைய சரக்கு.

ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக் கூறதாக்கி கூறிலே ஒன்றுதள்ளி :
நீளத்தில் 8 ல் 7 பகுதி i.e 7/8 th of “b”
குன்றத்தில் பாதிசேர்த்தால்
உயரத்தில் பாதியைக் கூட்டினால் i.e 1/2 of “a”
வருவது கர்ணந்தானே :
கிடைப்பது கர்ணம். i.e 7/8 of “b” + 1/2 of “a” =”c”

இதையேதான் பிதாகரஸ் பலவருடங்களுக்குப் பிறகு புதிய மொந்தையில் அடைத்து
C= sq. root of (a sq + b sq) என்று எழுதி அதை
“பிதாகரஸ் தியரம்” எனத் தன் பெயரில் பிரபலப் படுத்திக் கொண்டார். அல்லது அவர் பெயரால் அத்தேற்றம் பிரபலப்படுத்தப் பட்டுவிட்டது
பிதாகரஸ்களுக்கு பிதாக்கள் (அப்பன்கள்) எல்லாம் அந்தக்காலத்திலேயே நம் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். இதைப் போல இன்னும் எத்தனை தேற்றங்களும் சூத்திரங்களும் சொல் வழக்கிலேயே இருந்து மறைந்து விட்டனவோ ?
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com