Dismissed
NEW DELHI, JUNE 5. The Government today dismissed a senior Research and Analysis Wing (R&AW) officer, Ravinder Singh, missing for over a fortnight, for his alleged activities against the national interest.
Mr. Singh, a 1978 batch R&AW officer, now Joint Secretary and in charge of South East Asia, was dismissed after the President, A.P.J. Abdul Kalam, gave his nod for his dismissal under Article 311 (2) (c) of the Constitution, official sources said.
இது கடந்த 6ம் தேதி ஹிந்து தினசரியில் சிறியதாக ஒரு மூலையில் வந்த அனேகம் பேர் பார்த்திருக்கமுடியாத செய்தி. அரசாங்கத்தால் தகுதியானவர் எனத் தெரிவு செய்யப்பட்டு நாட்டுரகசியங்கள் புழங்கும் ஒரு துறையில் சேர்ந்து இணைச் செயலாளர் அளவுக்கு பதவி உயர்ந்து விளங்கிய ஒரு அதிகாரி ஏதோ முறைகேடுகள் செய்துவிட்டு திடீரென இரண்டு வாரம் காணாமல் போய்விட்டாராம். அதனால் நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியே அவரை "டிஸ்மிஸ்" செய்துவிட்டாராம். எங்கேயோ எதுவோ இடிக்கவில்லை?
CBI, ராணுவம் இவற்றின் செயல்பாடுகள் குறித்துகூட நமக்கு எதாவது தெரியும் ஆனால் RAW -வின் செயல்கள் குரித்து RAW -வில் வேலை செய்பவர்களுக்கே ஏதாவது தெரியுமா என்பது சந்தேகம்தான்.
இந்த இரண்டு வரிச் செய்திக்குப் பின் எத்தனை பக்கக் கதை உள்ளதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.
அந்த அதிகாரி உயிரோடுதான் இருக்கிறாரோ இல்லையோ அப்படி இருந்தால் எந்த நாட்டில் இருக்கிறாரோ எந்த நாட்டின் சார்பாக அங்கு இருக்கிறாரோ. இதில் பாவப்பட்டது அவரது குடும்பம்தான்.
நேருக்கு நேராக முன்னால் இருந்து சண்டை போட்டால் அது WAR. (முதுகுக்கு) பின்னால் இருந்து சண்டை போட்டால் அது RAW
“கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்”
என்ற பழமொழியும்
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.”
என்ற குறளும்தான் ஞாபகம் வருகிறது
Comments:
Post a Comment